மொன்டானா மாநில ஆளுநர் நாட்டிற்கு வருகை

அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் ஜியன்ஃபோர்ட்டே தலைமையிலான தூதுக்குழுவினர் நாட்டிற்கு...

by Staff Writer 09-10-2026 | 11:00 AM

Colombo (News 1st)   அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் ஜியன்ஃபோர்ட்டே தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாயம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
ஆளுநர் கிரெக் ஜியன்போர்டே (Greg Gianforte) தனது விஜயத்தின் போது, இலங்கைக்கு பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களையும், வர்த்தகர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மாநில பங்களிப்பு திட்டத்தின் ஊடாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மொன்டானா தேசிய பாதுகாப்புப் படைக்கும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் விசேட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அனர்த்த தயார்நிலை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இராணுவ வீரர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்