திரப்பனை பஸ் விபத்தில் 14 பேர் காயம்

திரப்பனை பஸ் விபத்தில் 14 பேர் காயம்

by Nadeeshan Meedin 07-10-2026 | 9:14 AM

Colombo (News 1st) திரப்பனை, கல்குளம் பகுதியில் இன்று(07) அதிகாலை தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

நிக்கவரெட்டியவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.