.webp)

COLOMBO (News 1st புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 150,000 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது.
இன்று (27) அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றுலா தினத்திற்கு இணையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுரஞ்சித் வேவிட நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு இதனை தெரிவித்தார்.
2 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்தப் பயிற்சியின் ஊடாக மாணவர்களுக்கு சுற்றுலாத் துறையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
