22ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

22ஆவது திருத்தச் சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

by Nadeeshan Meedin 26-09-2026 | 2:24 PM

COLOMBO (News 1st) உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் ஏனைய நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் நீடிப்பதற்கான நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியன மீதான விவாதம் நேற்றைய தினம் ஆரம்பமாகி 2 தினங்களாக நடைப்பெற்றதை தொடர்ந்து 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம்ஆகியன மீதான வாக்கெடுப்பு நேற்று (25) இரவு இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, 3ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.  

இதனிடையே, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் 3ஆவது வாசிப்பு திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய, நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் 3ஆவது வாசிப்பு பாராளுமன்றத்தில் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.