துமிந்த திசாநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

by Staff Writer 10-09-2026 | 12:55 PM

Colombo (News 1st) வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கும் மற்றுமொரு பெண்ணுக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று(10) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் மற்றும் வழக்குடன் தொடர்புடைய பெண் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

தலா 50,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் இருவரையும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வருடம் மே 23ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.