.webp)
-559694.jpg)
Colombo (News 1st) மின்சார ரயில்களை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டத்திற்காக 80 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்துள்ளார்.
மின்சார ரயில்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்துத் திட்டங்களும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மின்சார ரயில்களை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
மின்சார ரயில்களின் ஊடாக பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் தற்போதுள்ள திட்டங்களுக்கு அமைய, 2029 ஆம் ஆண்டில் மின்சார ரயில்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்தார்.
மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
