.webp)
-559707.jpg)
Colombo (News 1st) போதைப்பொருள் பயன்பாட்டினால் நாட்டில் நாளாந்தம் 80 முதல் 100 உயிரிழப்புகள் பதிவாகுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ
நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது இதனைக் கூறினார்.
போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தொற்றா நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் ஊடாக நாட்டின் சுகாதாரத் துறைக்குப் பாரிய சுமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புகைத்தலினால் நாளொன்றுக்கு சுமார் 50 பேரும், மதுபாவனையினால் 10 முதல் 15 பேரும், ஏனைய சட்டவிரோதப் போதைப்பொருள் பாவனையினால் 10 முதல் 15 பேரும் உயிரிழக்கின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் நீண்டகால சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தொற்றா நோய்களினால் மேலும் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ
வலியுறுத்தியுள்ளார்.
