.webp)
-559622.jpg)
COLOMBO (News 1st) தலைமன்னார் ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் வீடொன்றில் இன்று காலை 9 மணியளவில் கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறினால் கூரிய ஆயுதத்தால் கணவன் மனைவியை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளாகிய 27 வயதான மனைவி தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதான கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
