.webp)
-559223.jpg)
Colombo (News 1st) நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 தொடக்கம் 3 மீட்டர் உயரம் வரை மேலெழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் பேருவளையில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையோர பிரதேசங்களை நோக்கி வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வறட்சியால் 5 மாவட்டங்களில் 73,000-இற்கும் மேற்பட்டோர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக 4,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட உதவி செயலாளர் பிரஜீத் தனசூரிய தெரிவித்துள்ளார்.
