.webp)
-558780.jpg)
colombo (News 1st) கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை, பிணையில் விடுவித்து கடுவலை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டார்.
20 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டதுடன் அவருக்கு வௌிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபர் நடுத்தெருவில் படுகொலை செய்யப்படுவார் என வெளியிட்ட கூற்றுத் தொடர்பிலேயே சட்டத்தரணி சாகர காரியவசம் கொழும்பு மத்திய குற்றப் விசாரணைப் பணியகத்திற்கு காலை அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
