.webp)
-558759.jpg)
COLOMBO (News 1st)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் மாஅதிபர் நடுவீதியில் கொலை செய்யப்படலாம் என கருத்து தெரிவித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர் கைதானார்.
கடந்த 03ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சாகர காரியவசம், பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சாகர காரியவசம் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு இன்று(10) காலை அழைக்கட்டிருந்தார்.
