.webp)
-558654.jpg)
Colombo (News 1st) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் 3 பேருக்கும் உதவி பொலிஸ் அத்தியடர்சகர்கள் 06 பேருக்கும் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத், சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கே.பி.கருணாநாயக்க, வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எச்.பி.சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் வருண ஜயசுந்தர, சிறுவர் மற்றும் மகளிர் விவகார பதவிக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பதவியின் பதில் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் 06 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
