.webp)
-558728.jpg)
Colombo (News 1st) உயர்தர பரீட்சையை முன்னிட்டு இன்று(10) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக சுமார் 1,700 சிசுசெரிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளது.
இதனிடையே, உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரையில் பாடசாலை பஸ் சேவைக்காக முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.
உயர்தர பரீட்சை காரணமாக பாடசாலை பஸ் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் சேவைகளை இரத்து் செய்யாமல், சாதாரண நேர அட்டவணைக்கு அமைய ரயில் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமைகளில் பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் ரயில் மார்க்கங்களின் திருத்த பணிகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
