அனர்த்த நிவாரணத்திற்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபா

வெள்ளம் மற்றும் மண்சரிவு நிவாரண பணிகளுக்காக மேலதிகமாக 75 மில்லியன் ரூபா

by Staff Writer 05-08-2026 | 9:09 AM

Colombo (News 1st) வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக 75 மில்லியன் ரூபா மேலதிக தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் 56 பிரதேச செயலக பிரிவுகள் பலத்த மழை மற்றும் கடும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஜி.தர்மதிலக தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களின் நிவாரணப் பணிகளுக்காக மாவட்ட செயலாளர்களுக்கு இதுவரை 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலத்த மழை மற்றும் மண்சரிவினால் 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 51 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 3,538 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்கி 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 03 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணமல் போயுள்ளார்.