சொகுசு பஸ்ஸிற்கு தீ வைப்பு : விசாரணை ஆரம்பம்

சொகுசு பஸ்ஸிற்கு தீ வைப்பு : விசாரணை ஆரம்பம்

by Staff Writer 05-08-2026 | 1:43 PM

Colombo (News 1st) கடுவெல பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பஸ்ஸொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (05) அதிகாலை 03 மணியளவில் குறித்த பகுதிக்கு வதந்த இருவர், பஸ்ஸிற்கு தீயிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் மாத்தறை - கொழும்பு வழித்தட பஸ்ஸொன்றே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களை கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்