.webp)
-558348.jpg)
Colombo (News 1st) ஈரானுடன் இன்று(03) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இராணுவ தாக்குதல்களை இடைநிறுத்துவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்திருந்தார்.
ஈரானின் அணுசக்தி செயற்பாடுகளை நிறுத்தவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் விரைவாக ஒப்பந்தத்தை எட்ட முடிந்தால், ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வொஷிங்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று மீள ஆரம்பமாகுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பேச்சுவார்த்தை நடைபெறும் முறை மற்றும் அதில் பங்கேற்கவுள்ளவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை.
