.webp)
-558031.jpg)
Colombo (News 1st) டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதில் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் சடுதியாகப் பதிவாகிய கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியும் ஓரளவிற்கு குறைவடைந்துள்ளதாகவும் அதன் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
டெங்கு அபாயம் மிக்க 172 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் அதிக அபாயம் மிக்க 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,838 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 61 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
