.webp)
-558030.jpg)
Colombo (News 1st) 1990 சுவசெரிய சேவையின் ஊடாக நோயாளர்களை விரைவாகச் சென்றடைவதற்காக மோட்டார் சைக்கிள் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சேவையிலுள்ள அம்பியூலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சுவசெரிய மன்றத்தின் தலைவர் மேஜர் நிரோஷன் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 2016 ஜூலை 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்கு நேற்றைய தினத்துடன் 10 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.ை
சுவசெரிய சேவையின் ஊடாக இதுவரை 2.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாளாந்தம் 1000 வரையான நோயாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு பங்களிப்பு வழங்கி வருவதாகவும் 88 அம்பியூலன்ஸ்களுடன் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய சேவையில் தற்போது 319 அம்பியூலன்ஸ்கள் சேவையில் காணப்படுவதாகவும் சுவசெரிய மன்றத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் 45 அம்பியூலன்ஸ்களை சுகாதார வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாகவும் தனியார் வாகன உற்பத்தி நிறுவனமொன்றும் 50 அம்பியூலன்ஸ்களை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நகரப் பகுதிகளில் காணப்படும் அதிக வாகன நெரிசல் காரணமாக நோயாளர்களை சென்றடைவதற்கு அதிகளவிலான நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதை குறைப்பதற்கு துரித பதிலளிப்பு குழு என்ற வகையில் மோட்டார் சைக்கிள் குழுவினரை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சுவசெரிய மன்றத்தின் தலைவர் மேஜர் நிரோஷன் ரத்நாயக்க தெரிவித்தார்.
