.webp)
-557750.jpg)
Colombo (News 1st) கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக டெங்கு அதி அபாய வலயங்களான 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ந்தும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 77,000-இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதுவரையான காலப்பகுதியில் 57 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதனால் தத்தமது சுற்றுப்புற சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறு டொக்டர் கபில கன்னங்கர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
பதிவாகி வரும் நோயார்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவடைகின்ற போதிலும் எதிர்பார்த்தளவு குறைவடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தாலோ அல்லது டெங்கு நோய் அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக அருகிலுள்ள வைத்தியரை நாடுமாறும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
