வெளிநாட்டு கடன்களை செலுத்த நடவடிக்கை

ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன்களை செலுத்த நடவடிக்கை - நிதி அமைச்சு

by Staff Writer 22-07-2026 | 9:24 AM

Colombo (News 1st) இந்த வருடத்திற்குள் ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்திலும் ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் தவணைகள் செலுத்தப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரி, இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களங்களின் வருமானங்கள் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை விட அதிகமாக ஈட்டப்பட்டுள்ளன.

இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாரியதொரு உந்துசக்தியாக அமைந்துள்ளது.

வருடத்தின் இறுதி காலாண்டுகளிலும் வருமான இலக்குகளை கடந்து அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான அனைத்துத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.