வணவாசலவில் 17 இலட்சம் ரூபா சேதம்

வணவாசலவில் ரயில் தடம்புரண்ட இடத்தில் 17 இலட்சம் ரூபா சேதம்

by Staff Writer 22-05-2026 | 6:40 PM

Colombo (News 1st) வணவாசல ரயில் விபத்தின் காரணமாக ரயில் மார்க்க கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக சுமார் 200 அடி தூரத்திற்கு ரயில் தண்டவாளங்கள், ஸ்லீப்பர்கள் மற்றும் ரயில் மார்க்கத்தின் பாகங்கள் சேதமடைந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சேதமடைந்த குறித்த பகுதிகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியது.

இதேவேளை, ரயில் சமிக்ஞைக் கட்டமைப்பு மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த இரு பிரிவுகளின் மதிப்பீடுகள் மற்றும் மார்க்கக் கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பீடு ஆகியவற்றை ஒன்றிணைத்து முழுமையான சேத விபரங்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியது.