.webp)
Colombo (News 1st) தேசிய கலாபவனத்தில் இருந்த 42 பழமையான ஓவியங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி பாராளுமன்றத்தில் இன்று(21) தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பொருட்பரிசோதனை அறிக்கைக்கு அமைய, ஓவியங்களின் எண்ணிக்கையில் குறைபாடு காணப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மேலும் தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பின் போது மொத்த ஓவியங்களின் எண்ணிக்கை 281 ஆக இருந்த போதிலும், தற்போது 239 ஓவியங்கள் மாத்திரமே உள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
