.webp)

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான யோஷித ராஜபக்ஸவிற்கு எதிராக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க இன்று(14) நிராகரித்தார்.
சதி என்ற குற்றச்சாட்டிற்கு எதிராக பிரதிவாதி தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனை அடிப்படையற்றது என நீதிபதி நிராகரித்தார்.
அதன்பின்னர் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவிற்கு திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்து காட்டப்பட்டது.
அவர் குற்றவாளிக்கூண்டில் நின்றவாறு அந்த குற்றச்சாட்டுகளில் தாம் நிரபராதி என தெரிவித்தார். அதற்கமைய வழக்கின் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
