.webp)

Colombo (News 1st) கடந்த 04 மாதங்களின் நிறைவில் நுகர்வோர் சட்டங்களை மீறி செயற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களால் 8.9 கோடி ரூபாவிற்கும் அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபையினால் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால் நாடு தழுவிய ரீதியில் 7,334 வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
