.webp)
 (1)-556157.jpg)
Colombo (News 1st) சுற்றுலா மற்றும் முதலீட்டு ஈர்ப்பை அதிகரிக்கும் நோக்கில் விசேட ஒப்பந்தம் இன்று(13) சீனாவில் கைச்சாத்திடப்பட்டது.
சிரச ஊடக வலையமைப்பிற்கு சொந்தமான MTV நிறுவனம் மற்றும் சீனாவின் TDM macau நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சீனாவில் நடைபெற்ற ஆசிய - பசிபிக் ஔிபரப்பு ஒன்றியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு இணையாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இலங்கை மற்றும் சீனாவின் macau பிராந்தியத்திற்கு இடையிலான ஊடக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
MTV நிறுவனம் சார்பில் அதன் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் மற்றும் TDM macau நிறுவனம் சார்பில் அதன் செயற்குழு தலைவரும் பணிப்பாளர் சபையின் உப தலைவருமான Lorman Lo Song Man ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உள்ளடக்கப் பரிமாற்றம்(Content Exchange), ஊடக ஒத்துழைப்பு மற்றும் கலாசார நிகழ்ச்சிகள், தொழில்முறை ஈடுபாடு மற்றும் பிராந்திய ஒளிபரப்பு கூட்டாண்மைகள் ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
