ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

by Staff Writer 31-03-2026 | 6:24 PM

Colombo (News 1st) ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் Andrey Rudenko உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார்.

இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான 11ஆவது இருதரப்பு அரசியல் ஆலோசனை அமர்வில் பங்குபற்றுவதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அமர்வு நாளை மறுதினம்(02) வௌிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட இருநாட்டு விசேட பிரதிநிதிகள் அமர்வில் பங்குபற்றவுள்ளனர்.

இருநாட்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம், வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் எதிர்கால சவால்கள் மற்றும் அவற்றை வெற்றிகொள்ள வேண்டிய விதம் ஆகியன தொடர்பில் இந்த அமர்வின் போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் Andrey Rudenko ரஷ்யாவின் ஆசிய பசுபிக் வலயத்திற்கு பொறுப்பான பிரதி வௌிவிவகார அமைச்சராகவும் கடமையாற்றுகின்றார்.