.webp)
-555048.jpg)
Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றின் தலைவர் பதவிகளில் இருந்து சரத் கனேகொட விலகியுள்ளார்.
நாளை(31) முதல் அமுலாகும் வகையில் அவர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபையின் பதில் தலைவராக ஏ.கே.டீ.டீ.திமால் அரந்தர செயற்படுவாரென ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றின் பணிப்பாளரான ரொஹான் குணதிலக பணிப்பாளர் சபைகளிலிருந்து விலகியுள்ளார்.
