.webp)
-554225.jpg)
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான 'பொடி லெசி' என அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவை அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு நேற்று(25) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொடி லெசி சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்ற குற்றச்சாட்டில் இந்திய பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அந்நாட்டு சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ள சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்துவரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
