ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரதானி சுரேஷ் சலே கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது

by Staff Writer 25-02-2026 | 4:59 PM

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் இன்று(25) அதிகாலை பேலியகொடையில் கைது செய்யப்பட்டார்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது, அப்போதைய பிரிகேடியராக இருந்த சுரேஷ் சலே மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.

அதற்கு முன்னர் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சுயாதீன சாட்சியங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.