அக்குரேகொட கொலை : மற்றுமொரு துப்பாக்கிதாரி கைது

அக்குரேகொட இரட்டை கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி கைது

by Staff Writer 25-02-2026 | 5:05 PM

Colombo (News 1st)  அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி ஆகியோரை கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை, நக்கல பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் மறைந்திருந்த நிலையில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட மேலும் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்கேதநபர் தொடர்பாக தற்போது மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மற்றுமொரு துப்பாக்கிதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.