.webp)

Colombo (News 1st) பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்காக சிறுநகர செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமுள்ள 68 வீதமான பகுதிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல தெரிவித்தார்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறுநகர செயற்றிட்டத்தின் கீழ் முதலாவது திட்டத்தை ஸ்பிரிங்வௌி நகரத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல கூறினார்.
