.webp)

Colombo (News 1st) கொழும்பு கண்டி பிரதான வீதியின் கேகாலை 85ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
காத்தான்குடியை சேர்ந்த 22 வயதான இளைஞரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி வேகக் கட்டுபாட்டை இழந்து முன்னால் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அதற்கு முன்பாக சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியில் பயணித்த சாரதி, 2 உதவியாளர்கள், 2 பஸ்களிலும் பயணித்த 05 பயணிகள் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் காயமடைந்த மேலும் 2 பயணிகள் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நகரில் நேற்றிரவு வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய வேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
