.webp)

Colombo (News 1st) அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகளை பயன்படுத்தி வௌிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் பொரலஸ்கமுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜப்பான் மொழி பயிற்சி வழங்கும் நிறுவனமாக நடத்திச் செல்லப்பட்ட நிறுவனமொன்று ஜப்பானில் சாரதி தொழில்வாய்ப்புகள் காணப்படுதாக பேஸ்புக்கில் விளம்பரத்தை பதிவிட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தை சோதனையிட்ட போது அரச பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் ஒருவர், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மற்றும் ஏனைய தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சட்டவிரோதமாக தயராரிக்கப்பட்ட சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடங்கிய அட்டை, கல்வி அமைச்சினால் அதிபர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட 100 மாணவர் செயற்றிறன் அறிக்கைகள் அடங்கிய அரசாங்கத்தினால் அச்சிடப்பட்ட இரண்டு புத்தகங்களும் மீட்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
