.webp)
Colombo (News 1st) பெக்கோ சமனின் மனைவி சாதிகா லக்ஷானி எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று(23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியில் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
நிதிதூய்தாக்கல் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக பெக்கோ சமனின் மனைவி மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரான சாதிகா லக்ஷானி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உரித்தான 13 வங்கிக்கணக்குகள் மேல் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இதற்கு முன்னர் கொழும்பு பிரதம நீதவான் நீமன்றத்திற்கு அறிவித்திருந்தது.