தெற்கில் கைதான நால்வரும் விளக்கமறியலில்..

தெற்கு கடற்பிராந்தியத்தில் கைதான 5 சந்தேகநபர்களும் விளக்கமறியலில்..

by Staff Writer 23-10-2025 | 2:43 PM

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தெற்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட 05 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம நேற்று(22) உத்தரவிட்டுள்ளார்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் நேற்று மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

50 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை தவிர மேலதிக போதைப்பொருட்கள் கடலில் கொட்டப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் மன்றுக்கு தெரிவித்தனர்.

கடலில் கொட்டப்பட்டதாக கூறப்படும் போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் கொடி குமார எனும் நபரின் வழிகாட்டுதலில் இந்த போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.