கெஹெல்பத்தரவுடன் தொடர்பு: பியூமியிடம் விசாரணை

கெஹெல்பத்தர பத்மேவுடனான தொடர்பு குறித்து நடிகை பியூமியிடம் விசாரணை

by Staff Writer 22-10-2025 | 3:42 PM

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்பவருடன் காணப்பட்ட தொடர்பு குறித்து நடிகை பியூமி ஹங்சமாலியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பியூமி ஹங்சமாலியிடம் நேற்று(21) 03 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கெஹெல்பத்தர பத்மேவுடன் காணப்பட்ட தொடர்பு குறித்து மற்றுமொரு நடிகை மற்றும் நடிகர்கள் சிலரிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.