.webp)
Colombo (News 1st) 2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் நியூஸ் ஃபெஸ்ட், சிரச TV மற்றும் எஸ்லோன் லங்கா நிறுவனங்கள் விருதுகளை வென்றன.
ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
நிறுவனப் பிரிவில் எஸ்லோன் லங்கா தனியார் நிறுவனம் விருது வென்றது.
தொலைக்காட்சி ஊடக சிங்களப் பிரிவில் நியூஸ் ஃபெஸ்ட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் தொலைக்காட்சி சிங்களப்பிரிவில் MTV/MBC ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் அசோக டயஸ் வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வானொலிக்கான ஊடக சிங்களப்பிரிவிற்கான வெண்கல விருதை சிரச FM வென்றது.