.webp)
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை நீக்கும் சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்தது.
குறித்த சட்டமூலம்தொடர்பிலான வரைபு நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அது சட்ட மாஅதிபரின் மேற்பார்வைககாக அனுப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதி பத்திரம் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைச்சு மேலும் தெரிவித்தது.