பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

by Staff Writer 05-05-2025 | 6:31 PM

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த 2 சந்தேகநபர்களும் தலைமறைவாகியுள்ளதாக நம்பப்படும் இடங்கள் தொடர்பில் சோதனை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சந்தேகநபர்களை கண்டறியமுடியவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிற்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

அரசாங்க நிர்மாணமொன்றுக்காக விடுவிக்கப்பட்ட காணியை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு முற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக குற்றஞ்சுமத்தி இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னலையில் குறித்த வழக்கு இன்று(05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்தித் தொகுப்பு