.webp)
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் அஷோக ஆரியவங்ச உடன் அமுலுக்கு வரும் வகையில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டிய தேவை ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளதாக திணைக்களத்தின் விசாரணை அதிகாரியொருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் அஷோக ஆரியவங்ச நீண்ட காலமாக ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.
பதில் பொலிஸ் மாஅதிபரால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.