.webp)
Colombo (News 1st) எதிர்வரும் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிர்வாக அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.