கண்டி நகரை சுத்தம் செய்யும் V-Force குழுவினர்

கண்டி நகரை சுத்தம் செய்யும் V-Force குழுவினர்

by Staff Writer 25-04-2025 | 12:14 PM

Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், சிரச FM மற்றும் கம்மெத்த V-Force குழுவினர் கண்டி நகரை சுத்திகரிக்கும் பணிகளை இன்று(25) ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரீ தலதா தரிசனத்துடன் இணைந்ததாக இந்த தேசிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தேசிய பணியாக முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டத்தை பேராதனை பல்கலைக்கழகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கண்டி பொது சுகாதார பரிசோதகர்கள், கண்டி மாவட்ட செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், கண்டி சிட்டி சென்டர், சிரச FM மற்றும் கம்மெத்த V-Force குழுவினர் இணைந்து முன்னெடுக்கின்றனர்.

கண்டி மாநகர சபையின் கழிவு முகாமைத்துவத்திற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.