மத்திய வங்கியின் பொருளாதார மீளாய்வு அறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் கடந்த வருடத்திற்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 07-04-2025 | 10:53 PM

Colombo (News 1st) இலங்கை எதிர்கொண்ட மோசமான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரமான நிலையை அடைந்துவருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கையை வௌியிட்டு மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் மத்திய வங்கியின் ஆளுநரால் இன்று(07) கையளிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கையின் பிரகாரம் 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் அமுல்படுத்தப்பட்ட மறுசீரமைப்புகளின் சாதகமான முடிவுகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.