வௌிநாட்டு பயணியின் பணத்தை திருடிய சாரதி கைது

வௌிநாட்டு பயணியின் பணத்தை திருடிய சாரதி கைது

by Staff Writer 31-03-2025 | 5:48 PM

Colombo (News1st) துபாயிலிருந்து நாட்டிற்கு வந்த பயணியின் பணத்தை திருடிய வாடகை வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணியின் பயணப்பொதியிலிருந்த 9,044,00 ரூபா பணம் இவ்வாறு திருடப்பட்டது.

துபாயிலிருந்து நாடு திரும்பிய பயணி வாடகை வாகனத்தின் மூலம் தனது வீட்டிற்கு சென்றதுடன் மடிக்கணினி வைத்திருந்த பையை குறித்த வாகனத்திலேயே விட்டுச் சென்றுள்ளார்.

இது குறித்து வினவுவதற்காக வாடகை வாகனத்தின் சாரதியை தொடர்புகொண்ட போது குறித்த பை தனது வாகனத்திலுள்ளதாகவும் அதனை நீர்கொழும்பு நாயக்ககந்த பகுதியில் வந்து எடுத்துக்கொள்ளுமாறும் சாரதி கூறியுள்ளார்.

எனினும் பையிலிருந்த பணம் காணாமல் போயுள்ளதை அறிந்த குறித்த பெண் கட்டுநாயக்க விமான  நிலைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.