பெட்ரோல் குண்டு தாக்குதலில் சிறுவன் பலி

பெட்ரோல் குண்டு தாக்குதலில் சிறுவன் பலி

by Staff Writer 31-03-2025 | 4:44 PM

Colombo (News1st)  களுத்துறை கமகொட பகுதியில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் 6 வயதான சிறுவனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 29ஆம் திகதி அயல்வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவன் தாக்குதல் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இதன்போது அந்த வீட்டு உரிமையாளருக்கும் மற்றொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளாகிய சிறுவன் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(31) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெட்ரோல் குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.