.webp)
Colombo (News1st) 2025 தமிழ் - சிங்கள புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தமிழ் - சிங்கள புத்தாண்டு விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு விபத்துகள் மற்றும் கடுமையான நோய் நிலைமைகளை தவிர்க்கும் நோக்கில் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவு தெரிவித்தது.
ஒவ்வொரு விளையாட்டு நிகழ்விலும் கருத்தில்கொள்ள வேண்டிய விடயங்கள் மற்றும் மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிளோட்டப் பந்தயங்கள் உள்ளிட்ட விசேட விளையாட்டு நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய விடயங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
இந்த வழிகாட்டல்கள் விளையாட்டுகளின் போட்டித்தன்மையையும் ஆர்வத்தையும் அதிகரிப்பதுடன் ஒவ்வொரு விளையாட்டிலும் பாதுகாப்பாக பங்கேற்பதற்கு அனைவரையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்தது.