.webp)
Colombo (News1st) கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
பேராதனை - ஏதண்டுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
53 மற்றும் 46 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
இதனிடையே குளியாபிட்டிய - ஹெட்டிபொல வீதியின் கடவலகெதர பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
பரகஹகொட்டுவ - பண்டாரகொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே வாரியபொல - புத்தளம் வீதியின் பம்பரகம்மன பகுதியில் பஸ்ஸில் மோதி மட்பாண்ட விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திம்பிரிவெவ - வாரியபொல பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.