.webp)
Colombo (News 1st) ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் கொழும்பில் இன்று(31) முற்பகல் இடம்பெற்றது.
அதற்கமைய 2025 முதல் 2027 வரையான காலப்பகுதிக்காக ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக செயற்படவுள்ளார்.
ஷம்மி சில்வா நான்காவது தடவையாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.