.webp)
Colombo (News 1st) 2025 இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் காலவரையரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற நிலைமையின் காரணமாக ஐபிஎல் தொடரை இடைநிறுத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் போர் நிலவும் போது விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது உகந்ததல்ல என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
Punjab Kings மற்றும் Delhi Capitals அணிகளுக்கு இடையில் நேற்று(08) நடைபெற்ற போட்டி இடைநடுவில் கைவிடப்பட்டது.
போட்டியின் போது மைதானத்தின் மின் விளக்குகள் தீடிரென அணைந்ததுடன் தொழில்நுட்ப காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற 2 அணிகளும் உடனடியாக வௌியேற்றப்பட்டதுடன் அதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டனர்.
கடந்த மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமான ஐ.பி.எல் தொடரில் நேற்று(08) இடைநிறுத்தப்பட்ட போட்டி உட்பட 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளதுடன் 12 போட்டிகள் எஞ்சியுள்ளன.
இதேவேளை, பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - இந்தியா இடையேயான மோதல் வலுவடைந்துவரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரில் எஞ்சியுள்ள 8 போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.