அம்பலாந்தோட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

அம்பலாந்தோட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

by Staff Writer 31-03-2025 | 4:32 PM

Colombo (News1st)  அம்பலாந்தோட்டை - கொக்கல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் தமது வீட்டில் இருந்தபோது இன்று(31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 30 வயதான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நீண்ட காலமாக நிலவிய தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதுடன் இதற்காக உள்நாட்டு துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.